ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு நனவாகியுள்ளது!

இரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு நனவாகியுள்ளது என்று கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்


கடந்த காலங்களில்  பாராளுமன்றத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் விரைவில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அவர்களை சுடுவார்கள் இவர்களை சுடுவார்கள் என பேசி இருந்தார்கள்.

இன்று அவர்கள் கண்ட கனவு அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது தற்கொலைக் குண்டுகள் வைக்கப்பட்டு நனவாகி இருக்கின்றது
இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு தலைவராக காத்தான்குடியைச் சேர்ந்தவர் கருதப்படுகிறார்.

அதைவிடுத்து அவர் குற்றவாளி இவர் குற்றவாளி என்று ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு நாடகமாடுவதைவிடுத்து இத்துயர் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு நடைபெறலாம் என புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்த போதும்  அதை கவனத்தில் கொள்ளாமலும் மக்களுக்கு அறிவிக்காமலும் தங்களுடைய பாதுகாப்பை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்பட்டுள்ளனர்.

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய, சட்டத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மற்றவர்களை பொறுப்பு கூறிவிட்டு தாம் இந்த பிரச்சினையிலிருந்து விலகிக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களது இவ்வாறான செயற்பாடு இன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களது உயிர்களை காவு கொண்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து மறப்போம் மன்னிப்போம் என்ற வீணான பேச்சுக்களுக்கும், அவர் மீது பிழை, இவர் மீது பிழை என்ற நாடகம் ஆடுதலுக்கும் நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.

என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றினார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019