32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்


சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Xiaomi

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலின் பின்புறம் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி வை3 சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 506 GPU

– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10

– டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″

– கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார்

– ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019