விமானக் கோளாறு காரணமாக வந்த வழியே திரும்பிய ராகுல்

பிகார் தலைநகர் பாட்னாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் விமானம் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது. 

விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறு தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிகார், ஒடிசா மற்றும் மஹாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஹாக்கர் 850 எஸ்பி விமானத்தில் காலையில் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு புறப்பட்டிருக்கிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேர் சென்றனர். 

நடுவழியில் விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி உடனே விமானத்தை மீண்டும் டெல்லிக்கு திருப்பியுள்ளார். விமானம் பாதுகாப்பாக காலை 10.20 மணிக்கு மீண்டும் டெல்லியில் விமான நிலையத்தில் தரையிறங்கியது.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "பாட்னாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லாமல் டெல்லிக்கே திரும்பிவிட்டோம்.” எனக் கூறியுள்ளாளர்.

“சமஸ்திபூர் (பிகார்), பாலாசூர் (ஒடிசா), சங்கம்னர் (மகாராஷ்டிரா) ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ள தேர்தல் பிரசாரம் தாமதமாகும். அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் விமானத்தில் எடுக்கப்பட்ட வீடியோவையும் இணைத்துள்ளார். 

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019