யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ; பிரித்தானியா, கனடா, அமெரிக்கா இரங்கல்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளன.

பிரித்தானியா பிரதமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது : 

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்த அனைவரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையுடனான எமது உறவு முக்கியமானது, குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், அமைதியான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவது முக்கியமான ஒன்றாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட பல கனடாவாழ் இலங்கை மக்களை சந்தித்து உரையாடியுள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப்பெரிய சிரமம் மற்றும் தொடர்ச்சியான பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளார்கள் என இதன்போது தெரிவித்தனர்.

ஆகவே போரில் உயிர் பிழைத்தவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை அளிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்முறையை உருவாக்க இலங்கை அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன். 

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமின்றி பொறுப்புணர்வு, நீதி, சமாதானம் மற்றும் சமரசத்திற்காக செயல்படும் அனைவருக்கும் கனடா தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது.

போரின்போது பிரியமானவர்களை இழந்த தமிழ்-கனேடியர்கள் உட்பட அனைவருக்கும் கனேடிய அரசின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்-கனேடியர்கள் நாட்டிற்கு செய்துள்ள பல பங்களிப்புகளையும் அவர்கள் கடந்து வந்த துன்பங்களையும் அங்கீகரிக்க இன்றைய தினம் அனைத்து கனேடிய மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

இலங்கையில் மூன்று தசாப்த காலம் சிவில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் முடிவின் நிமித்தமான இந்த பெருமிதமான ஆண்டு நிறைவை பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரிப்புகள், காணாமல்போதல் மற்றும் கடந்த காலத்தின் உடல், உணர்வு ரீதியான வடுக்களை இன்னும் கொண்டிருக்கும் அனைவரையும் நாம் மதிக்கின்றோம் என்ற வகையில் சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கையின் முன்னெடுப்புக்களை நாம் தொடர்ந்தும் ஆதரிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019