ஜேர்மனிக்கு கட்டாய பாலியல் தொழிலாளர் கடத்தல் : நீதிமன்ற விசாரணை ஆரம்பம்!

பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுத்துவதற்காக 200 க்கு மேற்பட்ட பெண்களை ஜேர்மனிக்கு கடத்திய குற்றச்சாட்டில் 5 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்களை நாடளாவிய ரீதியாக இயங்கும் பாலியல் தொழில்துறையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் 4 தாய்லாந்து பெண்களும், ஒரு ஜேர்மனி ஆணும் கடந்த வருடம் கைது செய்யப்பட்டனர். அந்த நாட்டு பொலிஸாரால் நடத்தப்பட்ட பாரிய சூட்சுமமான தேடுதல் வேட்டையின் அடிப்படையில் இவர்கள் சிக்கினர்.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களின் கடவுச் சீட்டுகள் கடத்தல்காரர்களால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

அதுமட்டுமன்றி, பலருக்கு எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜேர்மனி – ஹனாய்யின் மேற்கு நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

பிரதிவாதிகள் 49 தொடக்கம் 60 வயது மதிக்கத்தக்கவர்கள் என்னும், அவர்கள் பெண்களை சுழற்சி முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியாக தங்களின் வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்ததாக சட்டவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் போலி சுற்றுலா வீசாக்களின் மூலமாக ஜேர்மனிக்கு கடத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை பலவந்தப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜேர்மனியில் பாலியல் தொழில் சட்டரீதியாக்கப்பட்டுள்ள போதும், சந்தேகத்திற்குரியவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் எந்தவித கொடுப்பனவையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019