நடிகர் விஜய் தந்தைக்கு பாஜகவினர் அனுப்பிய பார்சல் .. கொதித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய்.  சில வருடங்களுக்கு முன்னர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை தமிழ்நாட்டில் பிரபலமாக்க முயற்சி செய்தார் அவரது அப்பா எஸ். ஏ. சந்திரசேகர். ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் இதில் ஐக்கியமானார்கள். 

அதன் பிறகு விஜய்  , ஏல்.எல் விஜய் இயக்கத்தில் தலைவா என்ற படத்தில் நடித்தார். இதில் அரசியல் வசனங்கள் இருப்பதாகக் கூறி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. 

அதன்பிறகு விஜய் மக்கள் இயக்கத்தில் அவர்களுடைய ரசிகர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்கள்.

அதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் போது எல்லாம் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யின் அரசியல் வருகையை உறுதிசெய்தார். ஆனால் விஜய் இதற்கு மௌனமே சாதித்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர்  விஜய்யின் அப்பாவும். இயக்குநருமான எஸ்.ஏ . சந்திரசேகருக்கு பாஜகவினர் காவி வேட்டியை பார்சல்  அனுப்பிவைத்துள்ளனர். 

கடந்த 20 ஆம்தேதி வடபழனியில், காப்பாத்துங்க நாளைய சினிமாவை என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். அதில் எஸ். ஏ. சந்திரசேகரும் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில் : 

90 % பேர் அரசியலில் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். ஆட்சிக்கு யார் வந்தாலும் சினிமாவை காப்பாற்றப்போவதில்லை என்று தெரிவித்தார். 

மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களுடன் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களவைத் திரட்டி போராடினால்தான் இதுகுறித்து அரசுக்கு சொரணை வரும். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள அனைவரும் காவி வேட்டி கட்டி அலையப்போவதாகவும் இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகர் தெரிவித்தார்.  

இதனையடுத்து அவருக்கு தன் மகனை முதல்வராக்க ஆசை அதனால் மக்களின் கனவத்தை ஈர்க்க பரபரப்பாகப் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தனர்.

இந்நிலையில் எஸ், ஏ. சந்திரசேகர் முகவருக்கு பாஜகவினர் ஒரு பார்சலை அனுப்பி உள்ளனர். அதில் காவி வேட்டி, இருந்ததாகவும் தெரிகிறது. இது திருப்பூர் தெற்கு பாஜக இளைஞர் அணி சார்பில் அவருக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019