எனது குரல் ஆண் குரலாக இருக்கிறது: சாய் பல்லவி வருத்தம்!!

தென்னிந்தியாவில் தற்போது இளைஞர்களின் கனவுக் கன்னியாக சாய் பல்லவி இருந்து வருகிறார். முகத்திற்கு பயன்படுத்தும் ஒரு க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்ததுடன் தனது குரல் ஆண் குரலாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுள்ளார். 

தமிழிலில் நடிகர் சூர்யாவுடன் சாய் பல்லவி நடித்து முடித்த என்ஜிகே படம் வரும் மே 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை சூர்யா ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக பிரேமம் என்ற படத்தில் சாய் பல்லவி நடித்து, அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், ''முகத்திற்கு பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்'' விளம்பரத்தில் நடிக்க எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வேண்டாம் என்று கூறிவிட்டேன். எனக்கு தெரிந்தது எல்லாம் என்னுடைய பெற்றோர், சகோதரி பூஜா மற்றும் நண்பர்கள்தான்.

என்னுடைய சகோதரிக்கு நான் அவளைவிட நல்ல கலராக இருக்கிறேன் என்று வருத்தம். கண்ணாடி முன்பு நாங்கள் இருவரும் நிற்கும்போது என்னுடைய முகத்தையும், அவளுடைய முகத்தையும் திரும்ப, திரும்ப பார்ப்பாள். என்னைவிட ஐந்து வயதுக்கு இளையவள் அவள். அதிகமாக பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று கூறுவேன். 

ஆதலால் தான் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். வீட்டுக்கு சென்றால் வெறும் மூன்று சப்பாத்தி, அரிசி சாதமும் தான் சாப்பிடுவேன். இதுதான் இந்தியர்களின் நிறம். வெளிநாட்டவர்களின் நிறம் வெள்ளை என்றால், நம்முடைய நிறம் கருப்பு. ஆப்ரிக்கர்களும் கருப்பு நிறத்தில் தான் இருக்கின்றனர். ஆனால், அவர்கள்தான் அழகாக இருக்கின்றனர்.

நான் பிரேமம் படத்தில் நடிக்காவிட்டால், நானும் என்னுடைய முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க 100க் கணக்கில் க்ரீம்களை அப்பிக் கொண்டு இருப்பேன். பிரேமம் படத்தில் நடிக்கும்போது கண் புருவம் கூட சரி செய்தது இல்லை. இதுகுறித்து அப்போது அந்தப் படத்தின் இயக்குநர் அல்போன்சிடம், ''இது எல்லாம் செய்யாமல் என்னை எப்படி மக்கள் ஹீரோயினாக ஏற்றுக் கொள்வார்கள்'' என்று கேட்டுள்ளேன். என்னுடைய குரல் குறித்து கூட பயந்து கொண்டே இருந்தேன். என்னுடைய குரல் இன்றும் ஆண் குரல் போன்று இருக்கும். தொலைபேசியில் பேசும்போது, ''போனை கொஞ்சம் உங்களது மேடமிடம் கொடுங்கள்'' என்று எதிர் திசையில் கூறுவார்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019