ஜெயலலிதா வாழ்க்கைப் படம் - உடல் எடையை குறைத்து கூட்டும் கங்கனா ரணாவத்

விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்து, பின்னர் கூட்டி நடிப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடித்த தேவி-2 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியதாவது,

“பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய தேவி படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன்.

இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் நடந்து தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம்.

ஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்தும், பின்னர் கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும் என்றார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019