கிழக்கு மாகாண ஆளுனராக யாரை நியமிப்பது? குழம்பும் மைத்திரி

கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பதவி விலகியமையை யடுத்து, அந்தப் பதவியைப் பெற்றுக்கொள்ளப் பலரும் களத்தில் இறங்கினர். எனினும், முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட பலரது பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பதவி விலகினார். இதையடுத்து பலர், அரசியல் சிபாரிசுகளின் மூலம் ஆளுநர் பதவிக்கான விருப்பத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர்.

எனினும், அந்தச் சிபாரிசுகள் அனைத்தையும் நிராகரித்த ஜனாதிபதி மைத்திரி, தனக்கு நெருக்கமான – நம்பிக்கையான ரோஹண லக்ஷ்மன் பியதாஸவை கிழக்கு ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளாரெனத்தெரிய வருகிறது.

பேரியல் அஷ்ரப், அதாவுல்லா, வியாழேந்திரன், ரோஹிதபோகொல்லாகம ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களின் மூலம் ஆளுநர் பதவிக்காகச் சிபாரிசு செய்யப்பட்டபோதும் ஜனாதிபதி அவற்றை நிராகரித்துள்ளார். ஹிஸ்புல்லா பதவி விலகியதும், கிழக்கு ஆளுநர் பதவி இன்னொரு முஸ்லிமுக்குச் செல்வதை அநேக முஸ்லிம்கட்சிகள் விரும்பின. இதனால்பெளசியே நேரடியாக ஜனாதி பதியிடம் பேரியல் அஷ்ரப்பை ஆளுநராக்கும் சிபாரிசைச் செய்திருந்தார்.

அதேபோல, ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் மூலம் அதாவுல்லா, ரோஹித பொகொல்லாகம, வியாழேந்திரன் ஆகியோரும் முயற்சித்திருந்தார்கள். எனினும், தற்போதைய நிலையில் இவர்களில் யாரையும் ஆளுநராக்குவது பிரச்சினையை அதிகப்படுத்தும் என ஜனாதிபதி நேரடியாகவே சிபாரிசு செய்த வர்களிடம் கூறியிருக்கிறார்.

சு.கவின் முன்னாள் செயலாளராக இருந்த ரோஹண லக்ஷ்மன் பியதாஸவை நியமிப்பதன்மூலம், தேவைப்பட்டால் ஆளுநர்பதவியில் உடனடி மாற்றத்தைச் செய்வதும் இலகு என மைத்திரிபால கருதுகிறார் எனத் தெரிகிறது.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019