நெருக்கடியான வேளையில் ஒற்றுமையாகச் செயற்பட்ட தலைவர்கள்: சித்தார்த்தன்

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகவேண்டிய சூழல் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் தலைவர் த.சித்தார்த்தன். நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாகச் செயற்பட்டு, எந்த தியாகத்தையும் செய்வோம் என்பதை நிரூபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

இது ம்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்லவை வருமாறு:-

“1983ஆம் ஆண்டு 6வது திருத்த சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை நாடாளுன்றத்தில் இருந்து விலகுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த நிர்ப்பந்தத்தால் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அற்றுப் போகும் நிலையும், தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. தமது ஜனநாயகக் குரல்கள் வலுவிழக்க செய்யப்பட்ட நிலையில், ஆயுதப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு பெருகியது.

இன்று நாடாளுமன்றத்தை விட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் விலக்கப்படாவிட்டாலும், தாம் பழிவாங்கப்படுகிறோம், தமது குரல்கள் முடக்கப்படுகின்றன என்ற எண்ணம் முஸ்லிம் சமூகத்திடம் ஏற்படும் விதமான சம்பவங்களே நடக்கின்றன. முஸ்லிம் மக்களின் ஜனநாயக குரல்கள் அடைக்கப்பட்டு, அவர்களை தீவிர நிலைப்பாட்டை நோக்கித் தள்ளும் இனவாதச் செயற்பாட்டை அரசு அனுமதிக்கக் கூடாது. நியாயமாக, சட்ட, அரசியல் ரீதியாக கையாண்டு இந்த பிரச்சினைகளைதீர்க்கவேண்டும்.

இந்த நெருக்கடியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு நிற்போம், எப்படியான தியாகத்தையும் செய்வோம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள். அவர்களின் ஒற்றுமையையும், செயற்பாட்டையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் தேவையற்றது, இனவாதம் வெற்றியடைந்ததது என ஒரு பகுதியினர் குறிப்பிட்டு வந்தாலும், உண்மையில் இந்த விவகாரத்தில் மிதவாதப் போக்குடைய முஸ்லிம் தலைவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பதே என்னு டைய கருத்தாகும்” என்றுள்ளது.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019