என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் - பிரியங்கா சோப்ராவின் விருப்பம்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர்.

ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.பிரியங்கா சோப்ரா தன் கணவர் அமெரிக்காவுக்கு அதிபராக ஆவதற்கும் விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

‘நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருக்கிறது’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019