தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவேண்டியது அரசின் கடமை : மஹிந்த

இனவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்பவற்றை இஸ்லாம் சமயமும் வெறுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது எழுந்துள்ள தேசியப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை  வழங்கவேண்டியது தற்போதைய ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முஸ்லிம் மக்கள் நாட்டின் ஏனைய இனத்தவர்களுடன் மிகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டவர்கள் என்பதனை நாம் நன்கறிவோம். அதற்குக்காரணம் அவர்கள் அன்று தேசியத்துவத்திற்கு மதிப்பளித்துச் செயற்பட்டமையாகும்.

முஸ்லிம்களுக்கு வருடத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான தினமாக இப்புனித நோன்புப் பெருநாள் தினம் விளங்குகின்றது.

உண்மையான முஸ்லிம் ஒருவர் பொறுமை, மற்றவர்களுக்கு உதவிசெய்தல், மற்றவர்களின் பசியினை உணர்வுபூர்வமாக நோக்குதல், பிறருக்கு நிந்தனை, இம்சைகள் என்பன செய்யாதிருத்தல், பிறமதங்களையும் இனத்தவர்களையும் மதித்தல் மற்றும் தமது தாய்நாட்டிற்கு அன்பு காட்டுத்தல் ஆகிய நற்புண்புகளைக் கடைபிடிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றார்.

பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுடன் இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழுகின்ற எமது நாட்டிலே சமாதானம், ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கும் மேற்கூறிய சமய வழிகாட்டல்களின் மூலம் மகத்தான பக்கபலமொன்று கிடைக்கப் பெறுகின்றது” என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019