கோத்தாவை வீழ்த்த ரணில் மைத்திரி களத்தில், கோத்தா சிங்கப்பூரில் பதுங்கல்

தமிழினத்தை அழித்து இனப்படுகொலை செய்தவருமாகிய கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்க மைத்திரி –ரணில் தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கோத்தாவை தற்காலிகமாகவேனும் உள்ளே தள்ளி தேர்தல் வரை அதனை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இதனையடுத்து நீதிமன்ற அமர்வுகளை புறக்கணிக்க கோத்தா திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 24ஆம் நாள் தொடக்கம், நேற்று முன்தினம் ஜூன் 2ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்பவில்லை என்றும், அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயண அனுமதியை நீடிக்குமாறும் அவரது சட்டவாளர் கோரினார்.

இதையடுத்து, ஜூன் 19ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடையை தளர்த்தவும், ஜூன் 19ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைக்கவும், மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனிடையே யாழ்.நீதிமன்றிலும் லலித் -குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கோத்தபாய சமூகமளிக்க வேண்டியுள்ளது.

எனினும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையினில் கோத்தா மும்முரமாக உள்ளபோதும் அவரை பொறியினுள் சிக்க வைக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதிலிருந்து தேர்தல் வரை தப்பிக்கவே கோத்தா நீதிமன்ற அமர்வுகளிற்கு ஆஜராகாது டிமிக்கி கொடுக்க முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019