41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு : அவுஸ்திரேலிய – இலங்கை படையினரால் மீட்பு

41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றினை அவுஸ்திரேலிய – இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் Peter Dutton-உடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படைத்தளபதிகளில் ஒருவரான Major General Craig Furini இந்த தகவலை அங்கு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமது படையினருடன் இணைந்து குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக The Australian ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “குறித்த சம்பவம் மே மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. படகினுள் தண்ணீர் புகுந்துகொண்டதால் அது மூழ்கத்தொடங்கியபோது.

எனினும் அதிஷ்டவசமாக படையினரால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. படகில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியா நோக்கிய படகுப்பயணங்கள் தீவிரமடைந்துள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.

மார்ச் 7 ஆம் திகதி இதேபோன்றதொரு பயணத்தின்போது 40 பயணிகளுடன் ஒரு படகு இடைமறிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொடர்ச்சியான சம்பவங்களையடுத்து எல்லைப்பாதுகாப்பினை அவுஸ்திரேலிய கரையோர காவல்படையினர் அதிகரித்துள்ளதாகவும்” அவரகள் தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019