பேட்மிண்டன் வீராங்கனையுடன் நெருக்கம் உண்மைதான், ஆனால்... விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமான நட்பு இருப்பது உண்மைதான். அவருக்கும் எனக்கும் இருக்கும் பொதுவான நண்பர்களுடன் நாங்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து பேசிக்கொண்டிருப்போம். ஆனால் இது நட்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்லுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னர்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு இருவரும் அவரவர் துறையில் முழு கவனம் செலுத்தி கொண்டிருக்கின்றோம் என்பது மட்டுமே உண்மை என்று கூறியுள்ளார்.

பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல் இல்லை என்று விஷ்ணு விஷால் மறுக்காததால் விரைவில் நல்ல செய்தி வரும் என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

விஷ்ணுவிஷால் தற்போது 'ஜகஜால கில்லாடி', 'காடன்' மற்றும் விக்ராந்த் உடன் ஒரு படம் என திரையுலகில் பிசியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019