சிறுபான்மையினரின் எதிரிகாலத்தை கேள்விக்குறியாக்கும் பேரினவாதம்

இன­வாதம் மற்றும் மத­வாதம் என்­ப­ன­வற்றை மையப்­ப­டுத்தி தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் சிலரால் சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. பெரும்­பான்­மை­யி­னரை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக சிறு­பான்­மை­யி­னரைப் பலிக்­க­டா­வாக்கும் கலா­சாரம் நாட்டின் தேசிய ஒற்­று­மையை சீர்­கு­லைத்­தி­ருக்­கின்­றது என்று ஜே.வி.பி. யின் மத்­திய குழு உறுப்­பி­னரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் தெரி­வித்தார்.

நாட்டின் சம­கால நிலை­மைகள் குறித்து கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாடு இப்­போது பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றது. ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடி­மைப்­ப­டுத்த முனை­யு­மி­டத்து பல்­வேறு பிரச்­சி­னை­களும் மேலெ­ழும்பும் என்­பது நிதர்­ச­ன­மாகும். இப்­ப­டி­யொரு நிலை இப்­போது இலங்­கையில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. பல்­லின மக்கள் வாழு­கின்ற நாடு­களில் சக­லரின் உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லையேல் விளை­வுகள் விப­ரீ­த­மாக அமை­யக்­கூடும்.

பெரும்­பான்மை மக்­க­ளி­டையே தம்மை வீரர்­க­ளா­கவும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் காப்­பா­ளர்­க­ளா­கவும் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு தமது அர­சியல் இருப்­பினை தக்­க­வைத்­துக்­கொள்ளும் முயற்­சிகள் அதி­க­மா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. சமூக –பொரு­ளா­தார –அர­சியல் நெருக்­கடி நிலை­மை­க­ளினால் நாட்டு மக்கள் அதி­க­மான பாதிப்­பினை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். வரிச்­சு­மையும் வாழ்க்கைச் சுமையும் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. மக்­களை வேறு­பக்கம் திசை திருப்­பி­விட்டு நாட்டின் வளங்­களை வெளி­நாட்­ட­வ­ருக்கு விற்­பனை செய்­வதில் சிலர் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை அர­சாங்கம் மூடி­ம­றைக்­கின்ற ஒரு போக்கும் காணப்­ப­டு­கின்­றது. நெருக்­க­டிக்குள்ளான மக்கள் நல்­லாட்­சிக்கு எதி­ராக பல தட­வைகள் குரல் எழுப்­பியும் இருக்­கின்­றனர் என்­பதும் தெரிந்த ஒரு விட­ய­மாகும். ஆட்­சி­மாற்­றத்தின் அவ­சி­யத்­தையும் இவர்கள் வலி­யு­றுத்தி இருந்­தார்கள்.

தேசிய ஒற்­றுமை இப்­போது சவால்­க­ளுக்குள்ளாகி இருக்­கின்­றது. இந்த நாடு இனம், மதம் என்று பிள­வு­ப­டு­மாக இருந்தால் குரோத நிலை­மை­களும் அதி­க­ரிக்கும் என்­ப­த­னையும் விளங்­கிக்­கொள்ள வேண்டும். நாடும் மக்­களும் மென்­மேலும் சிக்கல் நிலை­மைக்கே உள்­ளா­கு­வார்கள்.

மூவின மக்­களும் ஒன்று சேர்ந்தால் மட்­டுமே இந்த நாட்­டுக்கு நல்­ல­தொரு எதிர்­காலம் இருக்­கின்­றது என்­ப­தனை ஒரு­போதும் மறந்து செயற்­ப­டுதல் கூடாது. இன­வாத செயற்­பா­டு­களைப் புறந்­தள்ளி தேசிய ஒற்­று­மையின் ஊடா­கவே நாட்டைப் பாதக நிலை­மை­களிலிருந்தும் பாது­காக்க முடியும் என்று ஜே.வி.பி திட­மாக நம்­பு­கின்­றது. இதற்­கான முன்­னெ­டுப்­பு­க­ளையும் இக்­கட்சி மேற்­கொண்டு வரு­கின்­றது.

சிறு­பான்­மை­யினர் என்ற வகையில் முஸ்லிம் மக்கள் இன்று பாரிய சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்­ளனர். அச்­சத்­திற்கு மத்­தியில் இம்­மக்­களின் வாழ்க்கை ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அமைச்­சர்கள் தங்கள் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்யும் அள­விற்கு பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இந்த நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் பேரினவாதிகள் நாளைய சமூகத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் நாளைய தலைமுறையை நாட்டுக்கு பொருத்தப்பாடுடைய சிறந்த தலைமுறையாக உருவாக்குவது தொடர்பிலும் ஒவ்வொருவரும் முக்கிய கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019