வீதியில் பாலைப்பழம் விற்பனை செய்த சிறுவனுக்கு நல்வழிகாட்டிய அமைச்சர் விஜயகலா..!!

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் சந்தியில், பாடசாலை நேரத்தில், பாடசாலைக்கு செல்லாமல் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்த 13 வயது மாணவன், கல்வி இராஜாங்க அமைச்சரினால் இனங்காணப்பட்டு, கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிய வேளை, ஏ9 வீதி பரந்தன் சந்தியில், வீதி அருகில் சிறுவன் ஒருவன் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருப்பதை அவதானித்தார்.

அதனைத்தொடர்ந்து, உடனடியாக சிறுவனை தனது வாகனத்திற்கு அருகில் அழைத்து சிறுவன் பாடசாலை மாணவன் என்பதை உறுதி செய்து உடனடியாக கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாணவன் பாடசாலை செல்லாமல் பாலைப்பழம் விற்பது தொடர்பில் விளங்கப்படுத்தியதுடன், 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள், வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனை அனுமதிக்க வேண்டாம் எனவும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக, பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மாணவன் இனிமேல் பாடசாலை நேரத்தில் இவ்வாறான வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் எனவும், மாணவனின் பெற்றோரை சந்தித்து அறிவுரை வழங்குமாறும், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நிலையில், மாணவன் விற்பதற்காக கையில் வைத்திருந்த பாலைப்பழத்தை பணம் கொடுத்து வாங்கிய அமைச்சர், அந்த மாணவனை வீடு சென்று கல்வி கற்குமாறும் அறிவுரை கூறினார்.இதே போன்று கிழக்கு வாகரை பிரதேசத்திலும் பல வறுமைக்கோட்டில் வாழும் சிறுவர், சிறுமியர்கள் கையில் பையுடன் வீதியில் பயணிப்போரை பார்த்து, ஏக்கத்துடன் ஒரு பையாவது வாங்கமாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இது சம்பந்தமாக கல்வி இராஜாங்க அமைச்சர், மதிப்பிற்குரிய அம்மணி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கவனம் செலுத்துவார்களாயின், அது அவரது சிறந்த பணியாக வரலாற்றில் பதியப்படும் என, சமூக ஆர்வலர்கள் இணையத்தளங்கள் வாயிலாக, கிளிநொச்சி சம்பவத்தினை மேற்கோள் காட்டி பரவலாக கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்கள்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019