ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வாய்ப்பே இல்லை - பீட்டர் டட்டன்

சமீப காலமாக, இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இச்சூழலை ஆஸ்திரேலியா கண்காணித்து வருவதை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதி செய்திருக்கிறார். 

கடந்த ஜூன் 4 அன்று, இலங்கைக்கு பீட்டர் டட்டன்  சென்றிருந்த போது ஆட்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையில் செய்தியாளர்களிடையே பேசிய டட்டன், “ஆஸ்திரேலியாவில் நிலைமை மாறிவிட்டது என ஆட்கடத்தல்காரர்கள் சொல்லியிருக்கக்கூடும். ஆனால், எதுவும் மாறவில்லை. ஆட்கடத்தல்காரர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள்,” என அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ். எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை அதிகாரி  க்ரைக் புரினி, “அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய தேர்தலைத் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சிக்கும் ஆட்கடத்தும் படகுகள் அனைத்தையும் நிறுத்தும்படி பிரதமர்(ஸ்காட் மாரிசன்) எனக்கு அறிவுறுத்தியிருக்கிறார்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

 ஆஸ்திரேலிய அரசின் கணக்குப்படி, 2013க்கு முன்னரான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 1200 க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி உயிரிழிந்திருக்கின்றனர். 

“ஆட்கடத்தல்காரருக்கு நீங்கள் பணம் கொடுத்தால், நீங்கள் பணத்தை இழப்பீர்கள். உடனடியாக நீங்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” என பீட்டர் டட்டன் இலங்கையர்களை எச்சரித்திருக்கிறார்.  

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த பின்பு, சட்டவிரோத படகுப்பயணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 

அப்படி, ஆஸ்திரேலிய எல்லைக்கு அருகே இந்திய பெருங்கடலில் சுற்றிவளைக்கப்பட்ட 20 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருந்தனர். 

அதற்கு முன்னதாக, மே மாத இறுதியில் தென் இலங்கையிலிருந்து மீன்பிடி படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேரை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தியிருந்தது. ஆஸ்திரேலிய வான் கண்காணிப்பு மூலம் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மூழ்கவிருந்த இலங்கையர்களை இலங்கை கடற்படை மீட்டதாக ஆஸ். ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. அதே போல், மே 12ம் தேதி மட்டக்களப்பு பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 15க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். 

“ஆஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத படகுப் பயணத்திற்கு முயற்சிப்பீர்களேயானால், நீங்கள் தடுத்து நிறுத்தப்படுவீர்கள். எப்போதும் போல எமது எல்லைகள் உறுதியானவை. நீங்கள் வெற்றிக்கரமாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அறவும் கிடையாது,” என எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை அதிகாரி  க்ரைக் புரினி தெரிவித்திருக்கிறார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019