இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தையில் ஜிகாதி பயங்கரவாதம் குறித்து கவனம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைகான விஜயத்தில், ‘ஜிகாதி பயங்கரவாதம்’ ஒழிப்பது தொடர்பாகவே முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

இதேவேளை 250 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புக்குப் பின்னர் வெளிநாட்டு தலைவரின் முதல் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைகளில் ‘ஜிகாதி பயங்கரவாதத்தை’ எதிர்ப்பது தொடர்பாக பேச்சுக்கள் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன.

பயங்கரவாதமும் தீவிரவாதமும் ஒரு கூட்டு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இந்தியா காண்கிறது. எனவே இந்த பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு இலங்கையால் பாதுகாப்பு தொடர்பாக உதவிகள் கோரப்பட்டால் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயார்நிலையில் உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பிரிவினைவாத ஜிகாதி சித்தாந்தங்கள் அகற்றப்பட வேண்டும், ஏனென்றால் அது பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

எனவே பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் இயல்பு நிலை திரும்புவதன் பிரதிபலிப்பதாக மோடியின் விஜயம் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019