நடிகர் சங்க கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க கார்த்தி ரூ.1 கோடி, விஷால் ரூ.25 லட்சம் நிதியுதவி!

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க தனது சொந்த பணத்திலிருந்து நடிகர் கார்த்தி ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். 

சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அபிபுல்லா சாலையில் 18 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. 

இதற்காக, சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தி கட்டிட நிதி திரட்டப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.30 கோடி செலவில் தரைதளத்துடன் 3 அடுக்குமாடி வசதியுடன் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் நடிகர் சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் ஆகியவை இந்த இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கட்டுமான பணிக்கு மேலும், பணம் தேவைப்படும் நிலையில், நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று விஷால் கூறியிருந்தார். ஆனால், வரும் 23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக, கலைவிழா நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணியை விரைந்து முடிக்க தன் பங்காக ரூ.1 கோடி நிதி உதவி அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து விஷால் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019