சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் - இராசையா

ராஜீவ் காந்தி படு­கொலை குற்­ற­வா­ளிகள் 07 பேரும் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் விடு­தலை செய்­யப்­ப­டு­வதை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று அகில இலங்கை இந்து சம்­மே­ள­னத்தின் ஆலோ­ச­கரும், காரை­தீவு பிர­தேச சபையின் முன்னாள் தவி­சா­ள­ரு­மான செல்­லையா இரா­சையா கோரியுள்ளார்.

இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி படு­கொலைக் குற்­ற­வா­ளி­களை விடு­தலை செய்­வது தொடர்­பான தீர்­மா­னத்தை தமி­ழக ஆளுநர் பன்­வா­ரிலால் புரோஹித் வரு­கின்ற வாரங்­களில் எடுப்­ப­தாக உள்­ளது.

இந்­நி­லையில் மகத்­தான தேர்தல் வெற்­றியைத் தொடர்ந்து நரேந்­திர மோடி இரண்­டா­வது தட­வை­யாக இந்­தியப் பிர­த­ம­ராகி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­கின்ற நிலையில் நேற்று வியா­ழக்­கி­ழமை விடுத்த ஊடக அறிக்­கை­யி­லேயே இவர் இவ்­வாறு குறிப்­பிட்டுள்ளார்.

இவரின் ஊடக அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்டுள்­ளவை வரு­மாறு:

மகத்­தான தேர்தல் வெற்­றி யைத் தொடர்ந்து இரண்­டா­வது தட­வை­யா­கவும் இந்­தியப் பிர­த­ம­ராகி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­கின்ற  நரேந்­திர மோடியை உலகம் தழு­விய இந்­துக்கள் சார்­பாக அகில இலங்கை இந்து சம்­மே­ளனம் மன­தார வர­வேற்­கின்­றது.

இலங்­கையில் வாழ்­கின்ற இந்து, - பௌத்­தர்கள் அனை­வ­ருமே இந்­தி­யாவை பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்கள். இவர்கள் அனை­வ­ரதும் சமய, கலா­சார, பாரம்­ப­ரிய, விழு­மி­யங்கள் இந்­துத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை. எனவே இவரை நாம் அனை­வரும் வர­வேற்­பதில் பெரு­மிதம் அடை­கின்றோம்.

இந்­துக்­களின் பாது­காப்பு அர­ணாக விளங் கு­கின்ற நரேந்­திர மோடியின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இவ்­வி­ஜயம் இலங்­கையில் வாழ்­கின்ற தமிழ் இந்­துக்­க­ளுக்கு விசே­ட­மாக கிடைத்துள்ள வரம் ஆகும். 

ஈழத் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு எட்­டாக்­க­னி­யாக மாறியுள்ள சூழலில் இந்­தி­யாவின் தலை­யீட்­டுடன் இலங்கை அர­சியல் அமைப்பில் கொண்டுவரப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தச் செய்­வதன் மூலம் அடிப்­படைத் தீர்வு ஒன்றை எட்ட பிர­தமர் மோடி உச்சபட்ச அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும் என்று கோரு­கின்றோம்.

ராஜீவ் காந்தி படு­கொலைக் குற்­ற­வா­ளி கள் கடந்த 28 வரு­டங்­க­ளாக தொடர்ச்­சி­யாக சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். இவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதை ஈழத்தில் வாழ்கின்ற தமிழ் இந்துக்கள் அனைவருமே விரும்புகின்றனர். இவர்களின் விடுதலையை பிரதமர் மோடி உறுதிப்படுத்துவார் என்று விசுவசிக்கின்றனர்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019