உங்களின் முடிவு இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது - மஹிந்த

முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் எடுத்த முடிவு இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவதானமாக இருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பே இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் எமது பதவி விலகல் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தோம். எந்த சூழ்நிலைமையில் நாம் பதவி விலக நேர்ந்தது என்பதை அவருக்கு தெரியப்படுத்தினோம்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய ஒரு நிலைமையே காணப்பட்டது. குறிப்பாக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் முஸ்லிம் மக்கள் பாரிய நெருடிக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

எமது பதவி விலகல் இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தலை ஏற்பட்டுத்திவிடக் கூடாது என்று இதன் போது எதிர்கட்சி தலைவர் கேட்டுக் கொண்டார். நாம் அதை ஏற்றுக் கொள்கின்றோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு நாங்கள் இடங்கொடுக்கப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறியுள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ முன்னின்று பேச வேண்டும். அதனூடாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு அவர் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்த அவர், இன்று எம்முடன் கலந்துரையாடிய விடயங்களை ஆதாரமாகக் கொண்டு அறிக்கையொன்றை விடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே போன்று நாட்டில் ஏற்படவிருந்த பாரிய வன்முறை சம்பவங்களை தடுக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேசத்திலிருந்து எமக்கு கிடைக்கும் உதவிகள் என்பவற்றையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தோம்.

நாட்டில் நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும். எனவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என்று உறுதியளித்தோம்.”என கூறினார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019