இந்திய பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, ´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். 

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடையும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். 

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

இந்திய பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு விஜயம்

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019