ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது

தேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தேர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் காரணமாக இன்று நிறைவேற்றுத் துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலைமை தொடருமாயின் மீண்டும் அரசியல் நெருக்கடி நாட்டில் ஏற்படும். தெரிவு குழுவின் சாட்சியங்கள் அனைத்தும் தேசிய பாதுகாப்பினை கேலிக் கூத்தாக்கியுள்ளது.

தற்போதைய பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி, பிரதமரும் இணைந்தே செயற்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் இந்த ஒற்றுமை இவ்விருவருக்கும் கிடையாது.

இருவரும் தொடர்ந்து பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றார்கள். இவர்களால் முடியாவிடின் நாட்டு மக்கள் (தேர்தலின்) ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019