தெரிவுக்குழு தொடர்பான குழப்பநிலைக்கு நீதித் துறையே தீர்வு வழங்க வேண்டும் – ஜி. எல். பீரிஸ்

தெரிவிக்குழுவின் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க சென்றால் நிறைவேற்று அதிகாரம் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதியும், சாட்சியமளிக்க சமூகம் தராவிடின் சட்டத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சபாநாயகர் குறிப்பிடுகின்றார். ஆகவே இரு துறையின் போட்டித்தன்மைக்கு நீதித்துறை ஒரு தீர்வை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாடாளுமன்ற தெரிவுகுழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான விமர்சனங்களையே முன்வைக்கின்றார். கடந்த காலங்களிலும் தேசிய பாதுகாப்பினை ஜனாதிபதியும், பிரதமரும் பொருட்படுத்தாமல் தமது சுய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜனாதிபதி பிரதமரையும், அவருக்கு ஆதரவானவர்களையும் தேசிய பாதுகாப்பு சபைக்கு வர வேண்டாம் என்று தடுத்தமையும், அதற்கு எதிராக பிரதமர் தரப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் பொறுப்பற்ற விதமாக இருந்தமையின் விளைவே ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019