தொடர் தோல்விகளை சந்திக்கும் நயன்தாராவின் அடுத்தப்படத்திற்கு ஹைகோர்ட் தடை!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நயன்தாராவின் கொலையுதிர் காலம்  படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள  இந்த படம் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் பாலாஜி குமார். இவர் முன்னதாக விடியும் முன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

எனவே தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட கூடாது இதற்கு சட்டப்படி தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. படம் ஆரம்பித்த  நாளில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகளை  எதிர்கொண்டு வரும்  கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூட ராதாரவியின் சர்ச்சை பேச்சு மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியது.  அந்த நேரத்தில் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் "கை விடப்பட்ட படத்திற்கு எதற்காக ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடத்துகிறார்கள் என்றே புரியவில்லை" என்று ட்விட்டரில் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

தடைகளை மீறி குறித்த தேதியில் வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகுமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019