தமிழரை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே அரசாங்கம் நடத்துகின்றது - விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் நடத்திவருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டபின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “முப்பது வருடமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தமானது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசாங்கத்தின் ஊடாகவும், வெளிநாடுகளின் ஊடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எதுவித உதவிகளோ, அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றோம்.

இவ்வாறான விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பல முறை பேசி வந்திருக்கிறேன். ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போன்றே மாறி மாறி வந்த அரசாங்கங்கள் நடத்தியுள்ளன.

இவ்வாறான நிலையில் சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்துநிறுத்தவம் பின்னிற்கவில்லை” என்று தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019