வாக்காளர் பட்டியலில் பெயர்பதிவுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை -வடிவேல் சுரேஸ்

வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மலையகத்தில் அது முறையாக முன்னெடுக்கப்படாமை ஒரு திட்டமிட்ட செயலா என பெருந்தோட்ட கைததொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பண்டாரவளை நாயபெத்த தோட்டம் சூரியபுரத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் வாக்காளர் பதிவிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கிராம சேவகர்கள் மூலம் விண்ணப்படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டாலும் உரிய முறையில் பதிவுகள் நடைபெறவில்லை எனவும் கிராமசேவகர்கள் இதனை முறையாக செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இது ஒரு திட்டமிட்ட செயலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் குறித்த செயற்பாட்டினால் எதிர்காலத்தில் மலையகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எனவே இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு உள்வாங்கப்பட்டவர்கள் தங்கள் தொகுதிகளில் கிராம சேவகருடன் இணைந்து வாக்காளர்கள் பதிவிற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெருந்தோட்டங்களில் கனிசமான வாக்காளர்கள் இருந்தும் அவை உரிய காலத்தில் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படாததினால், வாக்காளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி காணப்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கிராம சேவகர்கள் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளாார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019