அரசாங்கம் தேர்தலுக்காக தமிழர்களுக்கு சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது - சிவசக்தி ஆனந்தன்

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஏற்பட்டுள்ள ஐக்கியம், ஏன் தமிழ் பிரதிநிதிகளிடமும் ஏற்படக்கூடாது?

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்காக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தோம். அவர் இன, மதவாதி அல்ல என எண்ணினோம். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குகூட தீர்வு வழங்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது” என மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019