எனது தாயின் மறுமணம்: வைரலாகும் கேரள இளைஞனின் பேஸ்புக் பதிவு!

தாயாரின் மறுமணம் குறித்து, அவரது மகன் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு, பலரின் வாழ்த்துக்களையும் குவித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதி கோட்டயம் நகரைச் சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர், ‘எனது தாயின் மறுமணம்’ என்ற தலைப்பில் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தனது தாயாரின் மறுமணம் குறித்துப் பதிவு செய்திருக்கிறார். தனது தாயின் மறுமணத்திற்காகத் தான் வருந்தவில்லை, உண்மையில் சந்தோசப்படுவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

தனது தாயாரின் புகைப்படம் மற்றும் அவரின் புதிய தந்தை புகைப்படம் என இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு, அதன் கீழ் சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்புணர்வுடன் யாரும் இந்த பதிவைப் படிக்க வேண்டாம் என்றும், அப்படியே நீங்கள் வெறுப்புடன் பார்த்தாலும் அது எங்களை எந்த வகையிலும் இழிவுபடுத்தாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஸ்ரீதர் பதிவில் கூறியிருந்தது “எனக்காகத் தனது வாழ்க்கை முழுவதுமாக அர்ப்பணித்தவர் எனது தாய், அவரது வாழ்வில் பல துயரங்களை அனுபவித்தவர். ஒரு முறை என் தந்தை என் தாயைப் பலமாகத் தாக்கிவிட்டார். என் தாயின் தலையிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அப்பொழுது என் தாயிடம் நான் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் இன்னும் என் நினைவில் நிலைத்திருக்கிறது.

என் தாயிடம் “ஏன் இன்னும் இந்த உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று நான் கேட்டேன். நான் உனக்காக மட்டுமே வாழ்கிறேன், அதற்காக இந்த கஷ்டங்களை எல்லாம் நான் பொறுத்துக்கொள்வேன்” என்று தாய் பதில் அளித்தார்.

தாயின் பதிலைக் கேட்ட மறுகணமே, தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே தனியாக வந்துவிட்டேன். அந்த தருணத்திலிருந்து இப்படி ஒரு நல்ல செய்தியை எண்ணித்தான் காத்திருந்தேன்.

எனக்காகத் தனது இளமைப் பருவத்தைத் தியாகம் செய்தவர் என் அம்மா. என் தாய்க்குத் திருமண வாழ்த்து. அவர் மேன்மேலும் பல உயரங்களுக்கு செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக என் தாயின் மறுமணத்தை யாரிடமும் மறைக்க விரும்பவில்லை. இதில் எனக்கு எந்த இழிவுமில்லை” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது வரை இந்த பதிவை சுமார் 40,000 நபர்கள் லைக் செய்தும் 4000 நபர்கள் ஷேர் செய்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் தற்பொழுது இந்த பதிவு வைரல் ஆகிவருகிறது.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019