மகன்கள் விரட்டியடித்தாலும் கணவர் வீட்டில் இறுதி வரை வாழ விரும்பும் 83 வயது மூதாட்டி

என் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூதாட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அந்தியூர் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 87 வயது மூதாட்டி முத்தாயி அம்மாள் தனது மூத்த மகனுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.

நான் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் பகுதியில் வசித்து வந்தேன். எனது கணவர் பெயர் செல்லப்ப கவுண்டர். எனக்கு 3 மகன்கள் உள்ளனர். எனது கணவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் எனது சொத்தை எனது 3 மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன். ஆனால் எனது மகன்கள் என்னை முறையாக கவனிக்கவில்லை.

குறிப்பாக 2-வது மற்றும் 3-வது மகன்களுக்கு நிறைய சொத்து எழுதி வைத்தேன். எண்ண மங்கலத்தில் எனது கணவரின் பூர்வீக வீடு உள்ளது. அங்கு தான் வசித்து வந்தேன். தற்போது எனது 2 மகன்களும் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். நான் தற்போது அந்தியூர் சங்கராபாளையத்தில் உள்ள எனது தம்பி வீட்டில் வசித்து வருகிறேன்.

என்னுடைய ஆசை என் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும். அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மகன்களிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019