மாஸ்டர் பிரணவ்’ சென்னை சிறுவனுக்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர் மோடி

சென்னையின் பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரின் மகன் பிரணவ் குமார்(10). இவர் மோடி மீண்டும் வெற்றிப் பெற்று பிரதமராக பதவி ஏற்றார். இதற்கு வாழ்த்துக் கூற பிரணவ் ஆசைப்பாடிருக்கிறார். 

சிறுவயதில் இருந்தே கடிதம் எழுத ஆர்வம் கொண்ட பிரணவ், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். இதற்கு கிடைத்த பரிசாக பிரணவிற்கு பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த கடிதம் கையில் கிடைத்ததும் துள்ளி குதித்து அனைவரிடமும் காட்டியுள்ளான் பிரணவ். இந்த கடிதத்தில் பிரதமர் மோடி  ‘மாஸ்டர் பிரணவ் ராஜ்குமார்’ என குறிப்பிட்டு கூறியதாவது:

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றிப் பெற்றதற்காக நீங்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி.

இந்த கடிதத்தின் மூலம் 130 கோடி மக்களும் சிறந்த நிர்வாகம், அரசியல் வளர்ச்சி என அனைத்திலும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

இளைஞர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் மக்கள் வலிமையான அரசுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் வாழ்வில் நலம் பெற நவீன காலத்திற்கு ஏற்ப தகுந்த முடிவுகளை எடுத்துள்ளோம். 

இன்னும் மக்களுக்கான வளர்ச்சியில் நாங்கள் செய்யப்போவது தெரிந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். விவசாயிகள் வருமானம் இருமடங்கு, 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு, ரூ.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவது போன்ற திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். 

இளைஞர்களின் சக்தியால் இந்தியாவை உயரிய நாடாக மாற்ற உள்ளோம். முற்போக்கான வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவை மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான இந்தியாவை உருவாக்குவோம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019