நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: இந்திய அரசை அணுகிய உறவினர்கள்

கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார துறை தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி 12ஆம் திகதி அன்று  தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூஸிலாந்தை நோக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் பயணத்தை தொடங்கி யிருந்தனர். பயணத்தை தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் அவர்களின் இருப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை  ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள வெளிவிவகாரத்துறை பேச்சாளர் ரவீஷ் குமார்,

“பசிபிக் கடலை நோக்கி இப்படி ஒரு படகு சென்றிருப்பதை கேரள அரசாங்கம் தெரிவித்திருந்தது. குறித்த பகுதியிலுள்ள நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ள போதிலும், எந்த நாட்டிடமிருந்தும்) எந்த தகவலும் கிடைக்கவில்லை,” என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 12நாள் குழந்தை உட்பட 85 குழந்தைகள் அப்படகில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டில்லியிலுள்ள மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. 

இவர்களின் நிலைக்குறித்து கண்டறிய படகில் சென்றவர்களின் விபரங்களை உள்துறை, வெளிவிவகாரதுறை, டில்லி அரசாங்கம், தேசிய மனித உரிமை ஆணையகம் உள்ளிட்ட பலத்தரப்புக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019