தேதி மாறும் “நேர்கொண்ட பார்வை”: எப்போது ரிலீஸ்??

பிரபல நடிகர் அஜித் குமார் நடித்து வெளியாகவிருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியிடம் அளித்த வாக்கை காப்பாற்ற, ஹிந்தி திரைப்படமான “பிங்க்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பு கொண்டார் நடிகர் அஜித் குமார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவர், போனீ கபூர் தயாரிக்க, இயக்குனர் எச்.வினோத் இயக்க, ”பிங்க்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் தயாரானது.

தற்போது இந்த திரைப்படத்தில் படபிடிப்பு முடிந்து, ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் போய்கொண்டிருக்கும் நிலையில், இதனிடையே கடந்த ஜூன் 12 ஆம் தேதி ”நேர்கொண்ட பார்வை”யின் ட்ரைலர் வெளியானது.

இந்த ட்ரைலர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து ஆகஸ்டு 10 ஆம் தேதி “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.

ஆனால் ஆகஸ்டு 10 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால், தற்போது அஜித் திரைப்படத்தின் செண்டிமெண்ட் நாளான வியாழக்கிழமை வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதலால் பத்து நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 1 ஆம் தேதியே “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை வெளியிட திரைப்படக் குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அஜித் நடித்து சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “ விஸ்வாசம்” திரைப்படம் கூட வியாழக்கிழமையில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019