பிரதேச சபை தவிசாளர் கொலை - வட மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் கமலேந்திரனை கொலைசெய்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மற்றும் ரெக்சியன் மனைவி ஆகிய இருவருக்கும் எதிராக யாழ் மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் நிறைவடையாத சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் தனக்கு இருக்கும் அதிகாரத்தில் கீழ் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ் மேல் நீதிமன்றில் நேரடியக குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார். 

ஈழமக்கள் ஐனநாயக்கட்சியின் உறுப்பினரும் வடமாகாண முன்னாள் எதிர்கட்சித்தலைவரும் கமல் என்று அழைக்கப்படும் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் ரெக்சியனின் மனைவி அனிதா ரெக்கிசியன் ஆகிய இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2013 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதிக்கு அண்மித்த காலப்பகுதியில் யாழ்ப்பாண புங்குடுதீவு பிரதேசத்தில் டானியல் ரெக்சியன் கமலேந்திரன் என்பவரை கொலை செய்ததன் ஊடாக தண்டனைச் சட்ட நடவடிக்கை கோவை 296 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேச சபையின் தவிசாளர் ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைகள் யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019