தண்ணீர் எங்கே உள்ளது என்பது முதல்வருக்கு மட்டும் தான் தெரியும்: கனிமொழி

தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் திமுக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்றனர்.

பிரகாசம் சாலையில் தொடங்கிய பேரணி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் முடிந்தது. அதை தொடர்ந்து காலி குடங்களை ஏந்தி அங்கு திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கனிமொழியும் காலி குடங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, மிழகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு குடம் தண்ணீர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் எங்கே உள்ளது என்பது தமிழக முதல்வருக்கு மட்டும் தான் தெரியும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் தண்ணீரை மக்களுக்கு அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். 

திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை தீர்ப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

இந்த போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட திமுக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அரசு குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி அவர்கள் ஆர்பாட்டத்தில் குரலெழுப்பினர். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019