மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பராமரிப்பு இல்லாத 210 நீர்நிலைகளில் 53 நீர்நிலைகள் தூர்வாரும் பணி முடிவுற்றுள்ளதாக  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.  மேலும் 38 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த நிலை தற்போது 2 மணி நேரத்திற்கும் கீழ் வந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, லாரிகள் நீர் பிடிக்கும் மையங்களிலும், தண்ணீர் பிடிக்க கூடுதல் குழாய் வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் மழைநீர் கட்டமைப்பு உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் போர் வெல் காரணமாக நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிப்பைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் லாரிகள் வரவழைக்கப்படவுள்ளன என்றும் ஜோலார்பேட்டையில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டம் 1 வாரத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019