நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கைவிட்டதற்கான காரணம் - திமுக புதிய விளக்கம்

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் குறித்து தி.மு.க. நாளேடான முரசொலியில் வெளியாகி உள்ள விளக்கம் வருமாறு:-

ஆளும் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்கட்சியின் அதிருப்தியாளர்களாகவும், எதிர்ப்பாளர்களாகவும் ‘ஸ்லீப்பர் செல்’களாகவும் கருதப்பட்டார்கள். எம்.எல்ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர்தான் அந்த 3 பேர்.

மே மாதத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திடீரென ஏப்ரல் மாதத்தில் அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.

22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்று விட்டால், ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமே என்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரட்டையர் கருதினர். அதனால் ஸ்லீப்பர் செல்களான அந்த 3 பேரையும் வெளியே அனுப்பி விட்டால், பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விடும். தப்பித்துப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சதித் திட்டம் தீட்டப்பட்டது.

அதன் விளைவாகவே, அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிந்தது.

இந்தத் திரைமறைவுத் திட்டத்தை முறியடித்து “ஆப்பு வைப்பதற்காகவே”, தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையின்மைக்கான அறிவிப்பைக் தி.மு.க. தலைவர் வெளியிடச் செய்தார். ஏன் என்றால், தன்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது பேரவைத் தலைவர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதுதான் பேரவையின் விதி.

தமிழக சட்டசபை

தகுதி நீக்க நோட்டீஸ் கிடைத்ததும், அந்த 3 எம்.எல்.ஏ.க்களும், உச்சநீதிமன்றம் சென்று பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு தடை ஆணை பெற்று விட்டனர்.

இத்தகைய பின்னணியில் 28.6.2019 அன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என்றும், ஏப்ரல் மாதத்தில் இருந்த சூழ்நிலையில் அப்போது அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், இப்போது அது தேவையில்லை என்று கருதுவதாகவும், எந்தவித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக அறிவித்தார்.

தி.மு.க. தலைவரின் அந்த அறிவிப்பை, நாளேடுகள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டொரு நாளேடுகள் ‘தி.மு.க. திடீர் பல்டி’, பின் வாங்கியது தி.மு.க.’ என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும் பேரவைத் தலைவர் மீது கொடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தி, விவாதத்திற்கு எடுத்து கொள்ளச் செய்வது கழகத்திற்குக் கடினமான காரியமில்லை. அப்படிச் செய்திருந்தால், தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் குடிநீர்ப் பஞ்சம், ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் முதல் இடத்தையும், நாளேடுகளில் முக்கியத்துவத்தையும் பெற்று, பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பப் பயன்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட எதிர்மறை நிலையைத் தடுத்து, தவிர்ப்பதற்காகவே தி.மு.க. தலைவர் இப்படியொரு சாதுரியமான முடிவை எடுத்திருப்பார் என்பதை உணர வேண்டும். எப்போதும் முன்னுரிமைகளை நிரல்படுத்திக் கொண்டு, அதைப் பின் பற்றுபவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

அரசியலில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு முடிவை எடுப்பதும், அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போது முன்பு எடுத்த முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும், ஆக்கப்பூர்வமான, முற்போக்கான சிந்தனை ஆகும்.

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019