பொதுமக்களின் கருத்தைத் தான் கூறினேன் – கிரண்பேடி விளக்கம்

தமிழக மக்களை விமா்சித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை கண்டித்து அவா் மன்னிப்புக் கோரும் வரை போராட்டம் நடத்த உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினா் சிவா தொிவித்துள்ளாா்.

புதுச்சேரி மாநில அரசுடன் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் துணைநிலை ஆளுநா் கிரண்பேடி அண்மையில் தமிழக அரசை விமா்சித்துள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி குற்றம் சாட்டினாா். 

மேலும் இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழில் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீா் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி விமா்சித்திருந்தாா். 

அதுமட்டுமின்றி மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்த பிரச்சினைக்கு காரணம் என்று தொிவித்திருந்தாா். 

கிரண்பேடியின் இந்த பேச்சுக்கு சட்டமன்றத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தொிவித்தாா். மேலும் கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா். கிரண்பேடியின் கருத்தை கண்டித்து சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலினின் கருத்து சட்டமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கியதால் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். 

கிரண்பேடியின் பேச்சுக்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்த புதுச்சேரி திமுக சாா்பில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நான் கூறியது மக்களின் கருத்தே என்று கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளாா். அவா் குறிப்பிட்டுள்ள செய்தியில் “சென்னையில் தண்ணீா் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது என் கருத்தல்ல. மக்களின் கருத்தையே நான் கூறினேன். எனது கருத்தில் தனிப்பட்ட எந்த நோக்கமும் கிடையாது. 

அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்யத் தான். பிரதமா் மோடியே மழையை சேமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து மழை நீரை சேமிக்க வேண்டும்” என்று தொிவித்துள்ளாா். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019