ராஜினாமா செய்யாதீர்கள் - ராகுல் காந்தியை சந்தித்து 5 மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்

பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநில முதல் மந்திரிகள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ராஜினாமா முடிவை கைவிடுமாறு வலியுறுத்தினர்.பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக சோனியாவின் மகன் ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றார்.  

காங்கிரஸ் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் பலர் இருந்தும் மத்தியில் 2019-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் ராகுலுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வலிமையாக இருக்கும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால் ராகுல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. சொந்த தொகுதியான அமேதியில் ராகுல் பரிதாபமாக தோற்றார். இந்த தோல்விகளால் விரக்தி அடைந்த ராகுல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடந்த மே மாதம் 25-ந்தேதி அறிவித்தார். 

ராகுல் காந்தியுடன் காஷ்மீர் காங்கிரஸ் நிர்வாகிகள்

அவர் பதவி விலகுவதாக சொல்லி 35 நாட்கள் ஆகும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அவரை தலைவர் பதவியில் நீடிக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் ராஜினாமாவை வாபஸ் பெற மாட்டேன் என்று ராகுல் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநில முதல் மந்திரிகள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ராஜினாமா முடிவை கைவிடுமாறு  வலியுறுத்தினர். 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை ராகுல் காந்தியை சந்தித்து விரைவில் அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019