ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த போராட வேண்டும் - வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது வரவேற்கக்கூடியது. 22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழிதான். வட மொழிகள் அல்ல.

தமிழ் மொழிதான் உலகத்தின் மூத்த மொழி. அந்த 5 மொழிகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த பிரச்சினையை எடுத்துச் செல்லக்கூடிய கடமை தமிழக அரசுக்கும், சட்டத் துறை அமைச்சருக்கும் உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த போகிறார்கள். மாநில அரசு அதையெல்லாம் தடுத்து நிறுத்தப் போவதில்லை. 224 கிணறுகள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தோண்டப்பட உள்ளது. 10,000 அடி வரையில் பல வேதிப் பொருட்களை சேர்த்து அந்த தண்ணீரை வேகமாக பூமிக்கு செலுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் தமிழ்நாடு அடியோடு நாசமாகிவிடும். பல்வேறு மாவட்டங்கள் அடியோடு அழிந்து போகக் கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. இதை நான் ஒவ்வொரு முறையும் ஊர் ஊராக சென்று சொல்லி வருகிறேன். அமெரிக்கா போன்ற நாடுகளை இந்த முறையை அடியோடு தடை செய்துள்ளது. ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வருவது ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு என்பது மட்டுமல்ல. ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே மதம் இதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை.

இதனால் இந்திய ஒருமைப்பாடு சிதையும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு வரும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்துவதற்கு நாம் துணிந்து இணைந்து போராட வேண்டும்.

கேரளா எந்த ஊரு தீர்ப்பையும் மதிப்பதே கிடையாது. அவர்கள் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019