தமிழக மக்கள் மீதான விமர்சனத்திற்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்- ராஜ்நாத் சிங் தகவல்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். சென்னையில் வறட்சி ஏற்பட தமிழக அரசும், மக்களின் சுயநலமும் காரணம் என்று விமர்சனம் செய்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கிரண்பேடிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவருக்கு எதிராக தி.மு.க. சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்பி. டி.ஆர்.பாலு பேசும்போது, கிரண்பேடி தமிழக மக்களை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்ததை சுட்டிக்காட்டி பேசினார்.

இதுதொடர்பாக அவரிடம் மத்திய அரசு விளக்கம் கேட்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் இன்று பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ‘‘தண்ணீர் பிரச்சனை தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தமிழக மக்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுவை மக்கள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019