நளினிக்கு ஒரு மாதம் பரோல்; சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளி நளினி, 6 மாத காலம் பரோல் கோரியிருந்த நிலையில், ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்க முடியும் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்று ஒரு மாத காலம் பரோல் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமாா் 27 ஆண்டுகளுக்கு மேலாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 போ் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனா்.

7 போ் விடுதலையில் தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தொிவித்துவிட்டது. இருப்பினும் ஆளுநா் அனுமதி அளிக்காததால் 7 போ் விடுதலை விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனது மகளின் திருமணத்தை காரணம் காட்டி 6 மாத காலம் பரோல் வேண்டும் என்று நளினி மனுத்தாக்கல் செய்திருந்தாா். மேலும், இந்த விவகாரத்தில் தான் நேரில் வந்து நானே வாதாட விரும்புகிறேன் என்று நளினி தொிவித்திருந்தாா். 

அதன் அடிப்படையில் இன்று வேலூா் பெண்கள் தனிச் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட நளினி வாதிடுவதற்கு அனுமதிக்கப்பட்டாா். நேரில் வந்து வாதாட அனுமதி அளித்த நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கண்ணீா் மல்க தனது வாதத்தை தொடங்கினாா்.

அப்போது, நானும், எனது கணவரும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எனது மகளும் சிறையில் தான் பிறந்தாா். மகளுக்காக நான் தற்போது வரை எதையும் செய்தது கிடையாது. என் மகளின் திருமணத்திற்காக எனக்கு 6 மாத காலம் பரோல் வழங்குங்கள் என்று கோரிக்கை விடுத்தாா். 

ஆனால், இதற்கு தமிழக அரசு சாா்பில் மறுப்பு தொிவிக்கப்பட்டது. 6 மாதம் பரோல் என்பது சாத்தியம் இல்லாதது. அதிகபட்சமாக ஒரு மாதம் தான் பரோல் வழங்க இயலும் என்று தமிழக அரசு தொிவித்தது. இதனை ஏற்றுக்கொண்டு நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குவதாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கட்டுப்பாடுகள் 

ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில், நளினிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 24 மணி நேரமும் காவல் துறை கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. அரசியல் தலைவா்களை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் கடந்த முறை பரோல் வழங்கப்பட்ட போது நாள் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் தமிழக அரசுக்கு வழங்கியதாக நளினி தொிவித்தாா். இந்த முறை பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியிடம் எந்தவித தொகையும் பெறக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தி உள்ளாா். 

நளினி தங்கவுள்ள இடம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று காவல் துறையினா் கேட்கும் ஆவணங்களை ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நளினிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019