தமிழகத்தை விட்டு வைகோவை வெளியேற்ற வேண்டும்- மன்னார்குடி ஜீயர் ஆவேசம்

பழனி குபேரபட்டினத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்டவற்றை வழங்கி பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கல்வியுடன் சேர்த்து ஆன்மீகம், தேசப்பற்று குறித்து போதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள் என்றார்.

அதன் பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள வைகோ எப்போதுமே தேசத்தை துண்டாடும் கருத்துக்களை தெரிவிப்பவர். தற்போது அவர் தேசத்துரோகி என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை தமிழகத்தை விட்டே வெளியேற்றும் பணியை தேசப்பற்றாளர்கள் ஒவ்வொருவரும் இனி மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்துசமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் போன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி புஷ்கரணி நடத்தியது போல பழனி சண்முகநதியிலும் விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை செய்ய இந்து அமைப்புகள், சமூகநல அமைப்புகள் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019