ஜெயலலிதா நினைவு இல்லம் விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை போயஸ்கார்டனில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வாழ்ந்த வீடான, வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  

அவர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை, வெறும் 35 கோடிக்கு அரசு வாங்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிமன்றம், மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றவேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியது.

“ஜெயலலிதாவின் புகழை பரப்புவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடுகின்றனர். கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா?” என கேட்ட நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019