வடக்குக் கல்விப் புலத்தில் பழிவாங்குதல் அதிகரித்து விட்டது என தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது!

பழிவாங்குதல், பழிதீர்த்தல், கழுத்தறுத்தல், துரோகம்செய்தல், ஏமாற்றுதல் என்பன வடக்கு கல்விப்புலத்தில் இன்று அதிகரித்துவிட்டது எனச் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கக்கோருகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.

பதவிகளை வைத்துக்கொண்டு கீழ்நிலையில் உள்ளவர்களை பழிவாங்குவதும், பழிதீர்ப்பதும், கழுத்தறுப்பதும், துரோகம்செய்வதும், ஏமாற்றுவதும் வடபுலத்துக்கல்வியில் இன்று அதிகரித்துவிட்டன.
இதனை இனங்கண்டு தீர்வுகாணாவிட்டால் அழியப்போவது வடபுலத்துக் கல்வி மட்டுமல்ல. வடக்கு மக்களின் எதிர்காலமும்தான்.
என  எச்சரித்து தீர்வைக் கோரியுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வடக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் மோசமானது. உயர்நிலை அதிகாரிகளே சமமான அதிகாரிகளைப்பற்றி தூற்றுவதும், கீழுள்ளோரைப் பழிவாங்குவதும், தமக்கு விசுவாசமானவர்களை பாதுகாப்பதும், ஏதும் அறியாத அப்பாவிகள்மீது பழிசுமத்துவதும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதும், குற்றமிளைத்தவர்களை தப்பிக்க விடுவதும் சாதாரணமாகிவிட்டது. இதனை தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற நிலையில் இத்தகைய செயற்பாடுகள் இன்னும் அதிகரித்தே செல்கின்றன.
இவை இவ்வாறு தொடருமாக இருந்தால் சட்டரீதியிலான ஜனநாயக வழிமுறைகள் இல்லாமல்போய் வன்முறை ரீதியிலான கலாசாரம் மோலோங்க வாய்ப்புள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஆளுநர் இதற்கான உடனடித்தீர்வினை கண்டே ஆகவேண்டும். ஆளுநருக்கே தெரியாமல் நடைபெற்ற, நடைபெறுகின்ற பல விடயங்கள் ஒவ்வொரு தனிமனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கின்றது.
நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், வழங்கல்கள், பதிலளித்தல்கள், நடைமுறைப்படுத்தல்கள், நடவடிக்கைகள் அனைத்திலுமே மேற்கூறப்பட்ட அதிகார துஸ்பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. 
இவை தீர்க்கப்படாதவிடத்து தனி மனிதர்களுக்கு எதிரான தீவிரமான வெளிப்படுத்தல்கள் மேலோங்கும் என சங்கம் எச்சரித்துள்ளது.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019