வீடியோ: மீன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் ; பரபரப்பு ஏற்படுத்திய காணொளி !

இந்தோனேசியா, ஜூலை.9-    கடலில் குப்பைக் கழிவுகளை வீசுவது தற்பொழுது உலகளவில் பெரும் பிரச்சனையாக கருதப்படுகின்றது. அழிக்கவே முடியாத குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை பெரும்பாலானோர் கடலில் வீசுகின்றனர்.

இது சுற்று சூழலுக்கு தூய்மைக் கேடு ஏற்படுத்துவது மட்டுமின்றி கடல் வாழ் உயிரினங்களையும் பெருமளவு பாதிக்கின்றது. அவ்வகையில் அண்மையில் இந்தோனேசியவில் சமைப்பதற்காக வாங்கப்பட்ட மீனின் உடலில் நிறைய பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் அன்னா நுர்ஜானா எனும் பெண்மணி சமைப்பதற்காக கடையிலிருந்து “மஹி – மஹி” இன மீன் வாங்கி வந்துள்ளார். வீட்டில் பணிப்பெண் அம்மீனை சுத்தம் செய்ய முற்பட்ட போது அதன் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிய வந்துள்ளது . இது சம்பந்தமாக அவர் தனது ‘இன்ஸ்தாகிராம்’ சமூக வலைத் தளப் பக்கத்தில் வீடியா காணொளி ஒன்று பதிவு செய்துள்ளர்.

சுமார் 55 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் அம்மீனின் உடல் பகுதியை சுத்தம் செய்கின்றனர். அப்போது மீனின் வயற்றில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் கரண்டி, நெகிழி போன்ற பொருட்கள் வெளியெடுக்கப்படுகின்றது.

இந்த காணொளி சமூக வலைத் தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலர் இக்காணொளியை பகிர்ந்து கடலில் குப்பை வீசுபவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக மஹிமஹி என்பது பூமத்திய ரேகை சுற்றியுள்ள நீரில் காணப்படும் ஒருபொதுவான மீன்அவை  நீரின் மேற்பரப்பில் மிதக்கும் பாசிகள் மற்றும் பிற சிறியமீன்களை உண்கின்றன. கடலில் வீசப்படும் குப்பைகளும் நீரின் மேற்பரப்பில் மிதப்பதால் அதனை உணவாக எண்ணி உண்ணுகின்றன.

இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மீன்கள் வயிற்றில் சிக்கிக் கொள்வதால் அவை சுவாசப் பிரச்சனையை எதிர்நோக்குகின்றன. மேலும் இதனால் அவற்றால் மீண்டும் உணவு உட்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இறுதியில் மீன்கள் இறக்கின்றன என கூறப்படுகின்றது.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019