இன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்

சிங்களப்படையிரின் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பில் ஒன்றாக யாழ் நவாலிப்படுகொலை அமைந்துள்ளது. அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இன அழிப்பினை மேற்கொண்ட சிங்கள படையினர் சிறுவர்கள் முதியவர்கள் என்று பாராது நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த 152 மக்களை படுகொலை செய்தது.

இந்த படுகொலையின் சூத்திரதாரி சந்திரிக்காவே என்பதை மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள் இன்றும் அவர் சிங்கள ஆட்சியாளர்களின் ஆட்சி அதிகாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

09.07.1995 ஆம் ஆண்டு சிங்களப்படையினர் யாழ்குடாநாட்டினை கைப்பற்றும் முயற்சியில் மேற்கொண்ட முனனேறிபாய்தல் படை நடவடிக்கைமூலம் தமிழர்களின் வாழ்விடங்களை அழித்து தமிழர்கள் மீது குண்டுமழைபொழிந்து படைநடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்துகொண்ட போது விமானத்தாக்குதல் மூலம் தேவாலயத்தினை அழித்தது மாத்திரமல்ல அதில் தஞ்சமடைந்த சிறுவர்கள் பெண்கள்,கர்ப்பிணிதாய்மார்கள் முதியவர்கள் உள்ளிட்ட 152 பேரை பலிஎடுத்தது.

இது சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலையின் ஒன்றாக பதியப்பட்டுள்ளது உலக நாடுவரை இதனை கொண்டு சென்று இந்த படுகொலையினை புரிந்த சிங்கள படையினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் தமிழர்கள் ஈடுபடவேண்டும்

இந்த அரச பயங்கரவாதத்தின் குண்டுமழையில் பலிகொள்ளப்பட்ட மக்கள் நினைவாக இன்று சென்பீற்றர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆரானைகள் இடம்பெறவுள்ளன.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019