ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான 2 நாட்கள் விவாதம்

ஶ்ரீலங்கா அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்­பெற்று, நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நாளை நடத்­தப்­படும்.


பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஜே.வி.பி.யுடன் பிர­தான எதிர்க்­கட்­சி­யான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஒரு தரப்­பி­னரும் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர். ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இணைந்­துள்­ளனர். அத்­துடன் தீர்­மா­ன­மிக்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எவ்­வா­றான முடிவை எடுக்­கப்­போ­கின்­றது என்­பதே இன்னும் தெளிவு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

கடந்த நான்கு ஆண்­டு­கால அர­சாங்­கத்தின் பல­வீ­னங்கள் மற்றும் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் நிலை­மை­களை அடுத்து அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்­தியை காரணம் காட்டி அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­தது.

இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவாதம் இன்றும் நாளையும் நடை­பெ­று­வ­துடன் நாளை மாலை பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்.

ஜே.வி.பி., கூட்டு எதிர்க்­கட்சி, ஆகி­யன அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வுள்ள அதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் மற்­றைய கட்­சி­களும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

சுதந்­திரக் கட்சி இது­வரை தமது முடிவு தொடர்பில் அறி­விக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் அர­சாங்­கத்­திடம் அறுதிப் பெரும்­பான்மை இல்­லா­மை­யினால் இந்த பிரே­ர­ணைக்கு முகம்­கொ­டுப்­பதில் அர­சாங்கம் பெரும் நெருக்­க­டியை சந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. இதனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவை நேர­டி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேட்­டுள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இன்­னமும் பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா அல்­லது எதிர்ப்­பதா என்ற தீர்­மா­னத்தை எடுக்­க­வில்லை.

நேற்­றைய தினம் அவர்­களின் பாரா­ளு­மன்ற குழுகூடி ஆராய்ந்த போதிலும் கூட அவர்­களின் இறுதி நிலைப்­பாடு ஒன்று எட்­டப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் நாளை காலை மீண்டும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கூடி இறுதி முடி­வினை எடுக்­க­வுள்­ளது.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி ஐக்­கிய தேசிய முன்­னணி 106 ஆச­னங்­க­ளையும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் -6 ஆச­னங்கள், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 5 ஆச­னங்கள், தமிழ் முற்­போக்கு கூட்­டணி – 6 ஆச­னங்கள் அடங்­க­லாக), ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளையும், ஜே.வி.பி. 6 ஆச­னங்­க­ளையும், ஈ.பி.டி.பி. ஒரு ஆச­னத்­தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து போட்­டி­யிட்டு ஒரு ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டன. இவற்றில் ஈ.பி.டி.பி ஐக்­கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் தமது ஆதரவை வழங்கியிருந்தது. இதன்படி ஐக்கிய தேசிய முன்னணி முழுமையாக 107 ஆசனங்களையும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களையும் கொண்டிருந்தது.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019