ஆட்சியை வழங்கத் தீர்மானித்தால் உலகநாடுகளுடனான தொடர்பை நிரூபிப்பேன் – சஜித்

உலக நாடுகளுடன் தொடர்புகளை பேணக்கூடியவரா என கேள்விகளையும் , விமர்சனங்களையும் முன்வைப்பவர்களுக்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் என்னிடம் வழங்க தீர்மானித்தால் அன்று எனது உலக நாடுகளுடனான தொடர்புகளை நிரூபித்து காட்டுவேன் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ‘ ரனிந்துகம’ வீடமைப்பு திட்டத்தை அத்தனகலயில் அங்குராப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,“சர்வதேச கொள்கைகள், உலக நாடுகளுடனான தொடர்பாடல்கள் மற்றும் சஜித் பிரேமதாசவினால் உலக நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியுமா என்ற பல்வேறு கேள்விகளை எனக்கெதிராக எழுப்புகின்றனர்.

அங்குராப்பணம் செய்து வைக்கும் இந்த வீட்டு திட்டம் எனது சர்வதேச நாடுகளுடனான தொடர்புகளை மையப்படுத்தி கிடைத்தது என்பதை கூறிக்கொள்கின்றேன்.

வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்கள் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் நாம் தொடர்புகளை பேணும் போது இலங்கையில் வாழும் சாதாரண மக்களுக்கு அது பயனுள்ளதாக அமைய வேண்டும்.

காலஞ்சென்ற எனது தந்தை அவ்வாறே உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணி வந்தார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019